அது
ஒரு அழகிய மலைக்கிராமம் .
வெயிலின்
வருகைக்கு போர்வையை போட்டு தடை செய்தது போன்று மேக கூட்டங்கள் வானை சூழ்ந்து மலை முகட்டை
தன்னுளே புதைத்து கொண்டிருந்தது ...
சமீபத்தில்
அரசாங்கத்தால் அங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்காக போடப்பட்ட ரோட்டில் எதிரில் வாகனம்
தெரியாத அளவுக்கு கடும் பனி சூழ்ந்திருந்தது .
அங்கிருந்த
மழைவாழ் குடிகளும் வருவோரும் போவோரும் அங்கு இருந்த ஒரு கடையை சுற்றி மொய்த்துக்கொண்டிப்பார்கள்
. அங்கு போடப்பட்டுள்ள பெஞ்சுகளில் குளிரின் கொடுமையை குறைக்க டீ குடிக்க
கூட்டம் கூடும் டீக்கடை அது ...சொந்த காசா ? இல்லை ஓசி டீயா என்பது அது அவர்களின் தனிப்பட்ட
பிரச்சனை .
அது
என்ன கடை ? அந்த கடைக்கும் நம் கதைக்கும் என்ன சம்பந்தம் ? போய்
தான் பார்ப்போமே....
ஆனால் இன்று டீக்கடையில் கூடியிருந்த கூட்டம் டீ
குடிக்க வரவில்லை .
அங்கு
வந்த போலீஸ் காரர்களை கண்டு வேடிக்கை பார்க்க வந்த கூட்டம் .
ஏய்
இங்க யாரு மேட்டுப்பட்டி பொன்னையா
? உன்ன ஐயா கூபிடுறாரு .
அய்யா
இவர் தான் அய்யா அது ...என்றார் கான்ஸ்டபிள்
சரி
வந்த இடம் சரியானு முதல விசாரிப்போம் ...
சாமி
நாந்தாங்க பொன்னையா . நான் ஒன்னும் பன்னுலங்க சாமி . நானே வயித்து பொழப்புக்கு இந்த
டீ கடையா நடத்தி குடும்பத்த ஓட்டுறேன் சாமி .தப்பு தன்டாக்கு எல்லாம் போகமாட்டேன் சாமி
.........
அய்யய...
யாருடா இவன் காலைலே ... நிறுத்து ....இதெல்லாம் கேட்டேனா ...
சுகந்தி
உன் பொண்ணா ?
ஆமாம்
சாமி . எம் பொண்ணு தான் .
உன்
பொண்டாட்டி என்ன பண்ணுது
?
அது
அது ... அது எங்கையாவது இல பறிக்க கூப்பிட்டா போவும்..இல்லன்னா எஸ்டேட்க்கு வேலை இருந்தா
போவும் சாமி .. அதுக்கு ஒன்னும் தெரியாது சாமி ..அது ஒன்னும் பண்ணி இருக்காது..
ஆமா உன் பொண்ணு என்ன மெட்ராசுல படிக்குதா ?
ஆமாங்க
அய்யா,
“ இந்த ஊருலே மெட்ராசுக்கு படிக்க போன முத பொட்ட
புள்ளையா அது...மலைவாசியா எழுத்து வாசம் இல்லாம இருந்த என் வூட்டுல பொறந்து இந்த ஊருலே
12
வகுப்புள முத மார்க் வாங்குனுச்சுனு . நீலகிரி மாவட்டத்துக்கு தலைவர்
தா புள்ள படிக்க உதவுனுச்சு சாமி ..”
என்
புள்ளைய பத்தி என் சாமி கேக்குறிங்க
? என் புள்ள எதுலயாவது பரிசு வாங்குனுச்சுனு தலைவர் உங்கள விட்டு சொல்ல
சொன்னாரா ?
அதுக்குள்ள
அங்க வந்த கான்ஸ்டபிள்," அய்யா விசாரிச்சுட்டேன். சுகந்தி இவங்க பொண்ணு தான்"
அப்போ
சொல்லிடலாமா ?
நேத்து
உன் பொண்ணு.. டிரைன்ல அடிபட்டு செத்துபோச்சு ..
சாமி
ஆ ஆ ஆ ஆ...
நல்ல
பாத்திங்களா ? அது எம்பொண்ணா இருக்காது சாமி ? சாமி ..ஏந்த இளவரசி நம்ம
பொண்ணு செய்துடுச்சாம் புள்ள... நம்ம குடும்பத்த காப்பாத்த உன் வயித்துல பொறந்த சாமினு
சொல்லுவியே
அந்த
சாமி நம்மள விட்டு போயிட்டே
? இருக்காதுயா..இருக்காது... அது நம்ம பொண்ண இருக்காது ...
இந்த
சாமி தெரியாம சொல்லுதுயா..
இது
உங்க பொண்ணு தானே போட்டோ பாத்து சொல்லுங்க
?
அய்யோயோ
நா பெத்த மவராணி ..இதுக்கா உன்ன ஊரே மெச்சுற மாறி பாத்து பாத்து வளத்தேன்.
பொட்ட
புள்ளைய வெளி ஊருக்கு அனுபாதனு ஊரே சொன்னுச்சே ...தப்பு தான் எல்லாமே என் தப்பு தான்
..
சரி
உங்கள விசாரிக்கணும்....யோவ் கான்ஸ்டபில் ஸ்டேஷன்க்கு
கூட்டிட்டு வாயா அவங்க ரெண்டு பேரையும் .....
சரி
உன் பொண்ணுக்கும் யாருக்கும் ஏதாவது காதல் ????
சாமி
இப்டிலாம் என் பொண்ணு மேல அவதூறு பேசாதிங்க
? அதுந்து கூட பேசாது யா அது . அத போய்..இப்டி சொல்றிங்களே அய்யா ..
இல்லன
எவன்டையாவது கற்ப கொடுத்துட்டு செத்து இருக்குமோ ?
சாமி
இப்டி நாரகசமா பேசாதிங்க ..
நான்
ஒன்னும் புதுசா சொல்லல எல்லாம் நாட்டுல நடக்கிறது தான் ? அப்டினா யார் மேலயாவுது
சந்தேகம் ...
அப்டிலாம்
இல்ல சாமி ... எனக்கும் ஒன்னுமே புரில்ல சாமி... என் புள்ளைய முதல பாக்கணும் முடியும்மா சாமி
???
அதெல்லாம்
முடியாது...இங்க
பாரு நான் சொல்றத நல்லா கேளு .பொம்பள புள்ள விசயமா இருக்கு. நாளைக்கு விஷயம் வெளில
தெரிஞ்சா உனக்கு தான் அசிங்கம் .அதுனால இதுல என் பொண்ணு காதல் தோல்வியில தற்கொலை பண்ணிட்டான்னு
எழுதி இருக்கேன் அதுல கைநாட்டு வச்சு கொடுத்துட்டு கிளம்பு. விஷயம் வெளில தெரியாம நான்
பாத்துக்குறேன்.
ஐயோ
ஐயோ !!!!!!!!!!!
இப்போ
கைநாட்டு வைக்குறியா இல்ல
??? உன் பொண்ண யார்னே தெரியாதுன்னு பதில் மனு அனுப்பிடவா?? சீறினார்
இன்ஸ்பெக்டர்
கைகள்
பேனாவை தொடும் முன் ,
"மாமா அதுல கையெழுத்து போடாதிங்க" ............சன்னமாக ஒலித்தது அந்த குரல்.....

No comments:
Post a Comment